டீன்ஸை கையாள்வது எப்படி? இதோ சில டிப்ஸ்…
13 முதல் 19 வயதில் இருக்கும் டீன் ஏஜ் பருவத்தில் வரும் மாற்றங்கள் சந்தோஷமானதாக மட்டுமல்ல சிக்கலானதாகவும் இருக்கும்.
ஹார்மோன்களால் ஆண், பெண் இரு பாலரிடத்தும் ஏற்படும் உடல்ரீதியான மாற்றங்கள் என்பது டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் முதல் மாற்றம்.
எதிலும் ஈடுபாடற்ற மனநிலை இருக்கும். மேலும் தனி அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும்.
இதனாலேயே எப்போதும் தனிமையில் இருக்கவே விரும்புவார்கள். பெற்றோர்களிடம் அதிக இடைவெளி உண்டாக்கி நண்பர்களிடம் அதிகநேரம் உரையாட விரும்ப துவங்குவர்.
புதிதாக ஏதேனும் செய்ய விரும்புவர். அறிவுரைகள் கசக்கத்துவங்கும். கட்டுப்பாடுகளிலிலிருந்து வெளிவர விரும்புவர். எந்த விஷயத்திற்கும் தானே முடிவு செய்ய நினைப்பர்
பிடித்த ஆடை, மேக்-அப், பேன்சி ஐடம்ஸ் வாங்குவது என தனது விருப்பங்களுக்கு முக்கியதுவம் கொடுப்பர். மனது அலைபாயும் பருவம் இது.
அந்நேரங்களில் பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் துணை மிகவும் அவசியம். அவர்களை கையாள்வதில் பொறுமை மிக அவசியம்.
பிள்ளைகளின் கருத்துகளை வெளிப்படையாகக் கூற நீங்கள் அனுமதித்தால் தான், அதன் மூலம் அவர்களுக்கு எது நல்லது கெட்டது என்பது புரிய வைக்க முடியும்.
தவறு செய்ததற்காக டீன் ஏஜ் பருவத்தினரைத் தண்டிபதை விடுது, அவர்களை நல்வழிப்படுத்த என்ன செய்யலாம் என்பதை முயற்சிப்பது அவசியம்.