கொய்யா இலை டீயில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்!!

கொய்யா இலையில் வைட்டமின்கள் பி 6, சி, கால்சியம், இரும்பு, மாங்கனீசு, சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன.

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் 5 கொய்யா இலைகளை போட்டு கொதிக்க விடவும். மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் வற்ற வேண்டும், கொய்யா டீ ரெடி.

கொய்யா இலை துவர்ப்பு சுவை கொண்டது. இந்த டீயை அப்படியே பருகலாம். சுவைக்காக தேன் கலந்து அருந்தலாம். இதன் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

கொய்யா இலை டீயிற்கு பசி கட்டுப்படுத்தும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் உடல் எடையை குறைக்க உதவும்.

உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தும். வயிற்றில் காணப்படும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவும். அசிடிட்டி மற்றும் குடல் வாய்வு பிரச்னைகளையும் போக்கும்.

கொய்யா இலையின் டீக்கு இன்சுலின் தட்டுப்பாட்டை சீராக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

தினமும் கொய்யா டீ அருந்தினால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அலர்ஜிகள், தொண்டை கரகரப்பை போக்க உதவும்.

இந்த டீ அருந்துவதால் ஆண்களுக்கு விந்தணு தரம் மேம்படும். அதேபோல் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வலிகளை நீக்க உதவும்.

கொய்யா இலைகளில் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் அதிகம் உள்ளது. புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்று நோய் வராமல் தடுக்க இந்த டீயை அருந்துவது நல்லது.