பிஸ்கெட், சிப்ஸை ஏன் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருக்க தோன்றுகிறது?
பயணங்களிலோ அல்லது வீட்டிலிருக்கும் போதோ பலரும் நொறுக்கு தீனிகளை அதிகளவில் சாப்பிடுவர்.
குறிப்பாக முறுக்கு, சீடை போன்ற பாரம்பரிய பொருட்களை விட, சிப்ஸ், பிஸ்கெட், குளிர்பானங்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை எவ்வளவு உட்கொண்டாலும், நிறுத்தவே தோன்றாது.
மற்ற உணவுகளை உண்ணும் போது, மூளைக்கு வயிறு நிரம்பிவிட்டது என தோன்றும்.
ஆனால், பெரும்பாலானான பதப்படுத்தப்பட்ட உணவுகள் விரும்பி சாப்பிடும் வகையில் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றை சாப்பிடும்போது, வயிறு நிரம்பிவிட்டது என்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் மூளையில் இருந்து வராது.
எனவே தான், அவற்றை பலரும் தொடந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க நினைப்பர். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேவேளையில் இதில், புரதம் மற்றும் நார்ச்சத்து இல்லாததால் பசியின்மை காரணமாக உள்ளதால், ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் செயற்கை பதப்படுத்திகளை கொண்ட உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொண்டால், புற்றுநோய் உருவாகலாம் என்பது டாக்டர்களின் எச்சரிக்கையாக உள்ளதால் கவனமுடன் இருக்க வேண்டும்.