மெக்னீசியம் சத்து ஏன் தேவை? எப்படி அதிகரிக்கலாம்?
மெக்னீசியம் நம் உடலில் உள்ள தசை, நரம்பு, ஆற்றல் உற்பத்தி, எலும்பு பலம் உட்பட பல செயல்பாடுகளுக்கு அவசியமான கனிமமாகும். ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி கிராமும், பெண்களுக்கு 300 மில்லி கிராமும் தேவை.
குமட்டல், ஒற்றைத் தலைவலி, மன அழுத்தம், தசைப்பிடிப்புகள் உள்ளிட்ட பிரச்னைகள் மெக்னீசியம் குறைப்பாட்டால் வரக்கூடும். அவற்றை அதிகரிக்க என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என இங்கு காண்போம்.
30 கிராம் அளவு டார்க் சாகலெட்டில் கிட்டதட்ட 64 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது
100 கிராம் கீரையில் 25 மில்லிகிராம் முதல் 81 மில்லிகிராம் வரை மெக்னீசியம் உள்ளது. முட்டைக்கோஸ், லெட்யூஸ் போன்ற இலைவடிவ காய்கறிகளில் அதிகம் உள்ளன.
தினமும் 5 - 8 பாதாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு தேவையான மெக்னீசியம் கிடைக்கும்
நடுத்தர அளவில் உள்ள அவகேடோ பழத்தில் 58 மி.கி அளவுக்கு மெக்னீசியம் உள்ளது.
பருப்பு, கொண்டைக் கடலை, பட்டாணி, பீன்ஸ், சோயா பீன்ஸ் ஆகியவற்றில் அதிக அளவில் உள்ளது.
விதைகளில் ஆளி, பூசணி மற்றும் சியா போன்ற விதைகளில் அதிக அளவு மெக்னீசியம் இருக்கிறது.
வாழைப்பழங்கள் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் உள்ளன.