தினமும் நெய் சாப்பிடுவது நல்லதா...?

பசும் பாலில் இருந்து எடுக்கப்படும் நெய்யில் புரதம், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

தினமும் காலையில் சிறிது நெய்யை உருக்கி, இளம்சூடான தண்ணீரில் குடிக்க ரத்த ஓட்டம் சீராகிறது; நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது; உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நெய் மலமிளக்கியாக செயல்படுவதால் குடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.

இதில், அதிகளவு கொழுப்புகள் இருந்தாலும், ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது; உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

உணவுக்கு முன்பாக எடுப்பதால், செரிமான பிரச்னைகளை தவிர்க்க உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி பளபளப்பை தருகிறது.

தினமும் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.