ஆடி மாத கூழ் வீட்டிலேயே எப்படி செய்யலாம்? ரெசிபி இதோ…
ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் தயார் செய்து படையல் போடுவது வழக்கம். வீட்டிலேயே ஆடி மாத ஸ்பெஷல் அம்மன் கூழை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோமா…
இதெல்லாம் தேவை: கேழ்வரகு மாவு - 1 கப், நொய் பச்சரிசி - கால் கப், தண்ணீர் - 2 கப், தயிர் - 1 கப், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு - தேவையான அளவு
கூழ் செய்வதற்கு 2 நாட்கள் முன் இரவே கேழ்வரகை நன்கு தண்ணீர் பதத்தில் கரைத்து வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப்பார்த்தால் நன்கு புளித்து உப்பி இருக்கும்.
அடுத்த நாள் ஒரு பாத்திரத்தில் நொய் அரியை போட்டு, முதல்நாளே புளிக்க வைத்த கேழ்வரகு மாவை நீர்க்கக் கரைத்து அதை அடுப்பில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கிளற வேண்டும்.
அடிப்பிடிக்க விடாது நன்றாக கிண்டும் போது கூழ் கெட்டியாகி விடும். இதை முதல்நாள் இரவே கிண்டி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ருசியான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு கூழ் தயார்.
மறுநாள் காலையில் இந்த கூழில் சிறுது தண்ணீர், உப்பு, தயிர் போட்டு நன்கு
கரைத்து, நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
கூழ் உடன் முருங்கை கீரை பொரியல், காய்கறி பயிர் வகைகள் போட்ட குழம்பு அல்லது கருவாட்டு குழம்பு போன்றவற்றை சேர்த்து உண்ணலாம். .