குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு இருந்தால் எப்படி கையாள்வது?

குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (SLD- Specific Learning Disabilities) என்பது ஒரு வகை நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு என மருத்துவ உலகம் கூறுகிறது.

இது இருந்தால் ஒருவர் குறைந்தபட்சம் சராசரி அறிவுத்திறனைக் கொண்டிருந்தாலும் அந்த நபரின் படிக்க, எழுத, அல்லது கணிதம் செய்யும் திறனைக் குறைக்கிறது.

மூளை எவ்வாறு தகவல்களைச் செயலாக்குகிறது என்பதில் உள்ள நரம்பியல் வேறுபாடுகளிலிருந்து குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உருவாகின்றன.

கற்றல் குறைபாடு கொண்ட ஒரு குழந்தை இயல்பாகவே வாசிப்பதற்கு, எழுதுவதற்கு, பேசுவதற்கு, கவனிப்பதற்கு, கணிதக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதற்குச் சிரமப்படலாம்.

ஆனால் கற்றலில் குறை உள்ள அவர்கள் நடனம், பாட்டு, விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட திறன்களை கற்க, பழக மிகவும் உற்சாகம் காட்டுவார்கள்.

பொதுவாக 6 வயதை அடையும் போது அவர்களுக்கு கற்றலில் உள்ள குறைபாடுகள் வெளிப்படும். இதனாலேயே மதிப்பெண் பெறுவதில் அவர்கள் சிக்கலை சந்திப்பர்.

பள்ளியில் படிக்கும் போதே தனித்திறன் சார்ந்த பயிற்சிகள் அளிப்பது அவர்களது தன்னம்பிக்கையை மேம்படுத்தும்.

குறையைத் தாண்டி ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் திறமையை கண்டு பிடித்து வெளியில் கொண்டு வருவதே மிகவும் முக்கியம்.