எட்டு போடுவதால்... நம்மிடமே இருக்கு மருந்து !

வீட்டின் உள்ளே அல்லது மாடியில் இடத்தை தேர்வு செய்து, 6க்கு 12 அடி அல்லது 8க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு போடவும். அதில், தெற்கு வடக்காக நீளமாக இருக்கும் வகையில், 8 வடிவில் வரையவும்.

காலை அல்லது மாலை, வடக்கு நோக்கி நின்று, 8 வடிவ கோட்டின் மேல், உங்கள் நடை பயிற்சியை துவக்கலாம்.

துவங்கிய இடத்திற்கே வந்த பின், அதே வழியில் தொடர்ந்து, 21 நிமிடம் நடக்க வேண்டும். பின், மறுமுனையில் இதேபோல், 21 நிமிடம் கையை நன்கு வீசியபடி, மிதமான வேகத்தில், நடைபயிற்சி செய்ய வேண்டும்.

இந்த எட்டு போடும் பயிற்சியால், மார்பு சளி கரைந்து வெளியேறும்; ரத்த ஓட்டம் சமன்படக்கூடும். நீரிழிவு பாதிப்புக்கு தீர்வு கிடைக்கும்.

குளிர்ச்சியால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் போன்றவை தீரும். கண் பார்வை மற்றும் கேட்கும் திறன் அதிகரிக்கக்கூடும்.

குடல் இறக்க நோய் வருவதை தவிர்க்கலாம். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம்.

பாத வலி மற்றும் மூட்டு வலி மறைய உதவுகிறது. சுவாசம் சீராகி, உள் உறுப்புகள் மேம்படும்.