கூந்தலை பராமரிக்க சின்ன வெங்காயம் எண்ணெய் நல்ல தேர்வு!
சின்ன வெங்காயத்தில் சல்ஃபர் மற்றும் கால்சியத்தின் அளவு அதிகம். மேலும் வைட்டமின் சி, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் பி 6 போன்ற சத்துக்களும் நிறைய உள்ளன.
இதனால் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர்வதற்கு வெங்காயச் சாற்றைத் தலையில் தடவலாம். பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் தலையில் தொற்று பாதிப்புகளை போக்க உதவும்.
கூந்தல் ஆரோக்கியமாக வளர வெங்காயச் சாற்றை வாரம் 2 முறை தலையில் தடவலாம். மேலும் அதில் எண்ணெய் தயாரித்து வைத்துக் கொண்டால் அதை அடிக்கடி பயன்படுத்தி கொள்ளலாம்.
சின்ன வெங்காயம் எண்ணெய் தயாரிக்க ஒரு கிலோ சின்ன வெங்காயம் மற்றும் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் தேவை.
வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் இதை ஊற்றி கரண்டியால் கிளறிவிடவும்.
தொடர்ந்து நன்கு கிளறிய பின், வெங்காய கலவையில் உள்ள நீர் வற்றியதும், தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் அடுப்பை அணைத்து எண்ணெயின் சூடு, அறைவெப்பநிலைக்கு வந்ததும் துணியில் அதை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
தயார் செய்த எண்ணெயை அப்படியே பயன்படுத்தலாம். அல்லது கொஞ்சம் இளஞ்சூடாக்கி உச்சந்தலையில் தேய்த்து மசாஜ் செய்து பின்பு குளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.
பேஸ்மேக்கர் என்பது, ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கும் கருவி. மார்பின் மேற்பகுதியில் தோலின் அடியில் பொருத்தப்படுகிறது. 'லீட்ஸ்' எனப்படும் மெல்லிய கம்பிகளால் இதயத்துடன் இணைக்கப்படுகிறது.