உடலின் கொழுப்பை கரைக்க என்ன செய்யலாம்?
கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடுவதால் மட்டும் உடல் எடை அதிகரிப்பதில்லை. தேவையை விட அதிகமாக சாப்பிடுவதும் எடையை அதிகரிக்கும்.
எந்த வகையான உணவை சாப்பிட்டாலும், தேவைக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாறி, உடலில் சேமிக்கப்படுகிறது.
தேவையற்ற மற்றும் தேவையான உணவை, தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டே இருந்தால், பொறுமையிழக்கும் உடல், வியாதிகளை உருவாக்கும்.
உடல் பருமனால் இதய நோய்கள், பக்கவாதம் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சமையலுக்கு தினசரி பயன்படுத்தும் பொருட்களை கவனமாக கையாண்டாலே, கொழுப்பை குறைக்க முடியும்.
பட்டை, பூண்டு, இஞ்சி, மஞ்சள், வெந்தயம் போன்றவற்றில் மெட்டபாலிசம் எனப்படும், உடலின் உள்செயல்பாடுகளை அதிகப்படுத்தி, கொழுப்பை குறைக்கும் தன்மையுள்ளன.
பிரியாணி, குருமாவுக்கு மட்டும் இல்லாமல், பொடி செய்த பட்டையை டீயில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
மஞ்சளை பாலில் போட்டு குடிக்கலாம்; வெந்தயத்தை முளைக் கட்டி சாப்பிடலாம். வெந்தயம் ஊற வைத்த நீரையும் குடிக்கலாம்; இன்சுலினை சீராக சுரக்க வைக்க இது உதவும்.