கேரட்டில் இருக்கு நிறையா சத்து !
கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது; குடல் புண் வராமல் தவிர்க்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
அடிக்கடி கேரட் சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
குறைவான கலோரி கொண்ட கேரட் ஜூஸை தினசரி குடித்து வர, தொப்பை கொழுப்பை குறைக்க முடியும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸ்.
வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு பளபளப்பு கிடைக்கிறது.
இதில் அதிகளவில் பொட்டாசியம், நார்ச்சத்துகள் உள்ளதால், மலச்சிக்கலை தவிர்க்கலாம்.
இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது, கண்களின் பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.
கேரட் சாறுடன், சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
இதிலுள்ள வைட்டமின் சி எலும்புகளை வலுப்படுத்துவதால், தினமும் கேரட்டை தவறாமல் சாப்பிட மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.