குழந்தை பிறந்ததும் பால் கொடுப்பது நல்லதா?
சாதாரண பிரசவமாக இருந்தால், பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தரலாம்.
அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்திருந்தால், 4 மணி நேரத்திற்கு பின் தான் தர வேண்டும்.
மருத்துவ ரீதியாக பிரசவம் ஆனதில் இருந்து முதல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் சுரக்கும் பால் கொழுப்பு சத்து நிறைந்திருக்கும்.
அப்போது சிறிய அளவில் பால் கொடுத்தால் பசி தணிந்து விடும். குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதில் வேறுபாடு அதிகம் உண்டு.
பொதுவாக நாள் ஒன்றுக்கு 6 முதல் 8 முறை பால் கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடம் வரை கொடுக்கலாம்.
இதனால் 18 முதல் 20 மணி நேரம் நன்றாக துாங்கும். ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கு ஒரு முறை எழுப்பி பால் கொடுக்கலாம்.
பால் குடித்ததும் நல்ல துாக்கம் வரும். இதன் மூலம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் கழிப்பது, சரியான எடை அதிகரிப்பதும் ஏற்படும்.
குழந்தையின் தாய் தானியங்கள், பருப்பு, மீன், முட்டை, மட்டன், பூண்டு சாப்பிடலாம். இது தவிர இரும்பு, கால்சியம் சத்து மாத்திரைகளை குழந்தைக்கு பால் கொடுக்கும் காலம் முடியும் வரை சாப்பிடலாம்.