ஆம்லெட், வேகவைத்த முட்டை டயட்டிற்கு எது சிறந்தது?

முட்டையில் வைட்டமின்கள், இரும்புச்சத்துகள் மற்றும் புரதம் என பல்வேறு சத்துகள் உள்ளன. இதை ஒரு எளிய காலை உணவாக பலர் கருதுவதுண்டு.

ஆனால் டயட்டில் இருக்கும் போது ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை இதில் எது ஆரோக்கியமானது, சிறந்தது என பலரும் குழம்புவதுண்டு.

பொதுவாக வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது. புரதம் தேவைப்படுபவர்கள் இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் கொழுப்பு சத்து வேகவைத்த முட்டையில் வெறும் 5 கிராம் தான் இருக்கும். அதுவே எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் ஆம்லெட்டில் இது இரட்டிப்பாகும்.

அதனால் டயட்டில் உள்ளவர்கள் வேகவைத்த முட்டையை எடுத்துகொள்ளலாம். எடை அதிகரிக்க விருப்புவோர் தாராளமாக ஆம்லெட்டை எடுத்துக்கொள்ளலாம்.

இருந்தாலும் காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஆம்லெட்டுகளுக்கு நார்ச்சத்துக்கள் அதிகம் இருக்கும். டயட்டில் உள்ளவர்கள் அப்படி உண்பது மிகவும் சிறந்தது.

மேலும் காய்கறியுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வைட்டமின் சி-ஐ அதிகளவில் கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. இவை வேகவைத்த முட்டை உண்பதால் முழுவதுமாக கிடைக்கும்.