வஜைனல் வாஷ் பயன்படுத்தலாமா? எச்சரிக்கும் டாக்டர்கள்!

பிறப்புறுப்புக்கு ஈரப்பதம் அளித்து, துர்நாற்றம் போக்கி சுத்தமாக பராமரிக்க வஜைனல் வாஷ் தயாரிப்புகள் உதவும் என்ற கருத்து பலரிடமும் உள்ளது.

ஆனால், வஜைனல் வாஷ் பயன்படுத்தும் பெண்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இரண்டரை மடங்கு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பிறப்புறுப்பின் உட்பகுதியில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், அங்கு அமிலப்பண்பு கொண்ட பிஹெச் சமநிலையை பராமரிக்கின்றன. எனவே, அங்கு நோய் உண்டாக்கும் கிருமிகள் பாதிப்பு உண்டாகும்.

அதாவது பிறப்புறுப்பு தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். இதற்கு தனியே வாஷ் எதுவும் தேவையில்லை. ஆனால், பிறப்புறுப்பின் வெளிப்பகுதியை சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தாலே போதுமானது.

காட்டன் பேன்ட்டீஸ்களையே பயன்படுத்த வேண்டும். தினமும் பேன்ட்டீஸ்களை மாற்றவும். உள்ளாடைகளை சூரிய ஒளியில் காய வைக்கும் போது, நோய் உண்டாக்கும் பூஞ்சைகள் கொல்லப்படும்.

பிறப்புறுப்பை சுத்தப்படுத்த சாதாரண தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரே போதுமானது. ஒவ்வொரு முறை ரெஸ்ட் ரூம் சென்ற பின்னரும் பிறப்புறுப்பை கழுவவும்.

பிறப்புறுப்பில் வெளியேறும் திரவத்தில் நிறம் மாற்றம், துர்நாற்றம், அசவுகரியம், எரிச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் மருத்துவரை ஆலோசிக்கவும்.