பழங்களில் உப்பு, மிளகாய் பொடி தூவி உண்பது நல்லதா?
பழங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைவரும் அறிந்ததே. பழங்கள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை உடலுக்குத் நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்றன.
பழங்களில் உப்பு அல்லது மசாலா பொடி சேர்த்து உட்கொள்வது சுவையாக இருக்கும். ஆனால் அப்படி செய்வதால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
அதுமட்டுமின்றி, பழங்களில் உப்பு சேர்த்து சாப்பிடுவது எண்ணற்ற நோய்களுக்கு வாய்ப்பாக அமையும்.
பழங்களில் உப்பைத் தூவி உட்கொள்வதால் அவற்றின் சத்துக்கள் அழிந்துவிடும். சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
ஒவ்வாமைக்கு வாய்ப்புள்ளதால், உடலில் வீக்கம் ஏற்படக்கூடும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பழங்களில் உப்பு சேர்த்து சாப்பிடும் போது ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கலாம்.
பழத்தின் மீது உப்பு போட்டவுடன் தண்ணீர் வெளியேறத் துவங்கும். இது பழங்களின் ஊட்டச்சத்தை குறைக்கிறது.
ஒரு நேரத்தில் ஒரு பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும். பழங்களை நறுக்கிய ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும்.
புரூட் சாலட் சாப்பிட விரும்பினால், இனிப்பான அல்லது புளிப்பான பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். புளிப்பு மற்றும் இனிப்பு பழ சாலட்களை ஒன்றாக சாப்பிடக்கூடாது.
நீண்ட நாட்களுக்கு வைத்திருக்கும் பழங்களில், சத்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.