நம்மை ஆண்ட பிரிட்டனை ஆள்கிறார் நம் நாட்டு மருமகன்

பிரிட்டனின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, நேற்று பொறுப்பேற்றார்.

பழமைவாத கட்சித் தலைவருக்கான போட்டியில் வெற்றி பெற்ற பின், பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து பிரதமர் பொறுப்பை ஏற்றார்.

தவறுகளை சரி செய்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே இலக்கு - ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் பெற்றோர், இந்தியாவை சேர்ந்தவர்கள். பணி நிமித்தமாக அந்நாட்டுக்கு சென்றனர். அவரது தந்தை டாக்டராகவும், தாய் மருந்தாளுனராகவும் பணியாற்றி வந்தனர்.

கடந்த, 1980ல் பிரிட்டனில் பிறந்த ரிஷி, அங்கேயே படித்து வளர்ந்தார்.

அங்கு தன்னுடன் படித்த, 'இன்போசிஸ்' துணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக் ஷதா மூர்த்தியை காதலித்தார். இருவருக்கும், 2009ல் பெங்களூரில் திருமணம் நடந்தது.

ஒரு காலத்தில் நம்மை ஆண்ட பிரிட்டனை, இன்று நம் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆள்வது இந்தியர்களுக்கு பெருமைமிக்க தருணமாக அமைந்துள்ளது.

மேலும், பிரிட்டனை ஆளும் முதல் ஹிந்து என்ற பெருமையையும் ரிஷி சுனக் பெற்றுள்ளார்.