குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தயிர் தேன் : ஆய்வில் தகவல்!

நம் உடலில், குறிப்பாகக் குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றில் நமக்கு நன்மை செய்பவை நலநுண்ணுயிரிகள் (Probiotics) என்று அழைக்கப்படுகின்றன.

தயிர் நலநுண்ணுயிரிகள் நிறைந்தது. இதில் புரோபயாடிக்குகள் தவிர, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதில் தேன் சேர்த்து உண்பது அதில் உள்ள நுண்ணுயிரிகள் முழுமையாக நம் உடலில் சேர வழிவகுக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய் பல்கலை கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வில் தேன் கலந்து உண்டவர்கள் குடலில் நிறைய நலநுண்ணுயிரிகள் உயிருடன் இருந்தன.

மேலும் தேனானது நலநுண்ணுயிரிகளைக் காக்கிறது என்ற ஆய்வுக்கூட முடிவு கூறுகிறது.

பொதுவாகவே தயிர் மற்றும் தேன் இரண்டும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, அவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் பங்களிக்கின்றன.

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் நல்ல பாக்டீரியா இதில் அதிகம் காணப்படுகின்றன என ஆய்வு நமக்கு தெரிவிக்கின்றன.