மூட்டுவலியை முடக்கும் முடக்கத்தான் கீரை!! பயன்கள் அறிவோமா!

மூட்டுவலி பிரச்னை இருந்தால், துவக்கத்திலேயே, முடக்கத்தான் கீரையை எடுத்து கொண்டால், பூரண சுகமாகும். இதில், 'தாலைட்ஸ்' என்ற பொருள் உள்ளது. இது மூட்டுகளில் படிந்திருக்கும் யூரிக் அமிலத்தை கரைத்து மூட்டுவலியை விரட்டுகிறது.

வைட்டமின், தாது உப்புகள் இருப்பதால், இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால், மலச்சிக்கல் குணமாகும்.

சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களை சீர் செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில், முடக்கத்தான் இலையில் பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும்.

ஜலதோஷத்தால் ஏற்படும் தலைவலியை போக்க, முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி சரியாகும்.

உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதை தடுக்க, முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து சாப்பிட, புற்று நோயின் கடுமை குறையும்.

தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையை உட்கொண்டு வந்தால், அல்சர் பிரச்னை விரைவில் முற்றிலுமாக குணமாகும்.

முடக்கத்தான் இலைகளை கைப்பிடி அளவு கொதிக்க வைத்து, க்ரீன் டீ போல் குடித்தால், உடல் சோர்வு மறையும்; லேசாக கசப்பு இருக்கும் என்பதால், தேன் சேர்த்து குடிக்கலாம்.

முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, அதை கட்டி வந்தால் மூட்டு வலி வீக்கம், வலியும் குறையும்.