பிஸ்கெட்டுக்கு பதிலாக ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருக்கட்டுமே !
பெரும்பாலான பள்ளிகளில் ஸ்நாக்ஸ் இடைவேளை விடப்படுகிறது. அப்போது, குழந்தைகள் பலரும் பிஸ்கட் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளையே கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, பிஸ்கட், குக்கீஸ், சாக்லேட், கேக், முறுக்கு போன்றவற்றை தான், 80 சதவீத மாணவர்கள் கொண்டு வருகின்றனர்.
அதிக சர்க்கரை, சிந்தடிக் எடிபிள் புட் கலர், மைதா, ரீபைண்ட் ஆயில் போன்ற உடம்புக்கு முற்றிலும் கேடு விளைவிக்கும் பொருட்களையே, இதுபோன்ற உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
ஒரு சில பள்ளிகளில் மட்டுமே, ஆரோக்கியமற்ற உணவுகள் கொண்டு வருவதை தடை செய்து கண்காணிக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இதை கண்டுகொள்வதில்லை.
எனவே, பள்ளியை இதில் குறை கூறுவதை விட, பெற்றோர்கள் பொறுப்பேற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
சுண்டல், பச்சைப்பயறு, பழங்கள், காரட் போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை தினமும் தர வேண்டும். எப்போதாவது ஒரு முறை பிஸ்கட் தரலாம் என்பது டயட்டீஷியன்களின் அட்வைஸாக உள்ளது.
முடிந்தவரை, வீடுகளில் செய்த ஸ்நாக்ஸ்களை குழந்தைகளுக்கு தரும் போது ஆரோக்கியம் மேம்படக்கூடும்.
மேலும், காலையில் எழுந்தவுடன், காபி, டீ, ஹார்லிக்ஸ் போன்றவற்றுடன் பிஸ்கட் உண்ணும் பழக்கத்தை, பெரும்பாலான மாணவர்கள் வைத்துள்ளனர்; இதுவும் ஆரோக்கியத்தை பாதிப்பதாகும்.