மாதவிடாயை தள்ளிப்போட மாத்திரை எடுப்பவரா நீங்க?
மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு பயன்படும் மாத்திரைகள் அனைத்தும் ஹார்மோன் மாத்திரைகள் தான்.
முதல் தடவை மாதவிடாயை தள்ளிப் போடுவதற்கு டாக்டரின் ஆலோசனையுடன் வாங்கிய மாத்திரைகளை, அடுத்தடுத்த முறையும் தொடர்ந்து சாப்பிடுவது சரியான அணுகுமுறை இல்லை.
ஏனென்றால், டாக்டரிடம் ஆலோசனை பெற்ற போது இருந்த நிலையில், கர்ப்பப்பையின் தன்மை, உடல் நிலை அடுத்தடுத்த மாதங்களில் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
அந்த சமயத்தில் சிறிய கட்டிகள் இருந்து, ஹார்மோன் மாத்திரைகளால் அவை பெரிதாகி இருக்கலாம்.
மாதவிடாய் வலி, மாதவிடாய் தள்ளிப் போக, சீரற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகளுக்கு தரப்படும் ஹார்மோன் மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடாது.
தவிர்க்க இயலாத சூழலில், தற்காலிகமாக மாதவிடாய் தேதியை தள்ளிப் போடுவதற்கு 4 - 10 நாட்கள் மாத்திரை சாப்பிடுவதால் பிரச்னை வராது.
உடலில் புதிதாக ஏதாவது மாற்றம் நடந்துள்ளதா என்பது தெரியாமலேயே, பழைய மருந்து சீட்டை வைத்து மாத்திரை வாங்கி பயன்படுத்துவது வீண் பாதிப்புக்கு வழிவகுக்கும்.