புதுமையும் பழமையும் கலந்த கஜகஸ்தான் சுற்றுலா
உலகின் ஒன்பதாவது பெரிய நாடு கஜகஸ்தான். நிலப்பரப்பால் சூழப்பட்ட பெரிய நாடு என்ற பெயரையும் இது தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மலைகள், ஏரிகள், சமவெளிகளால் சூழப்பட்ட கஜகஸ்தான் உலகளவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகைதரும் நாடுகள் பட்டியலில் 43-வது இடத்தின் உள்ளது.
கடந்த 2015ல் இங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஐந்தாண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆஸ்தினா, அல்மாடி போன்ற பிரபலமான நகரங்கள் மறு பொலிவு பெற்றன.
கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு கஜகஸ்தானின் வளர்ச்சிப் பணிகள் துரிதமாகின. இன்று கஜகஸ்தான் சுற்றுலாத் துறையில் மூன்று லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அர்மேனியா, அசர்பைஜான், ரஷ்யா, ஜார்ஜியா உட்பட பல அண்டை நாடுகளில் இருந்து கஜகஸ்தான் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 90 நாட்கள் வரை வீசா தேவை இல்லை.
தற்போது இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்தும் ஏழு நாள் கஜகஸ்தான் சுற்றுலா செல்ல சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இரண்டு லட்ச ரூபாயில் இருவர் கஜகஸ்தான் சுற்றுலாவை உற்சாகமாக முடித்துக்கொள்ளலாம்.