தசைகளை ரிலாக்ஸ் செய்ய ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அவசியம்!

பல மணி நேரம் ஒரே நிலையில் உட்காருவதால், தொடையில் உள்ள தசைகள் இறுகி விடுகின்றன.

தொடை தசைகளுக்கு மேல் இருப்பது இடுப்பு, முதுகு தசைகள். தொடை தசைகளில் ஏற்படும் இறுக்கம், குனியும் போது, அதற்கு மேல்புறம் உள்ள தசைகளில் அதிகப்படியான அழுத்தத்தை தந்து, சிதைவை ஏற்படுத்தலாம்.

இதற்கு எளிய தீர்வு, தசைகளை 'ரிலாக்ஸ்' செய்து, வலிமையாக்கும் 'ஸ்ட்ரெட்சிங்' உடற்பயிற்சிகள்.

சிக்னலில் நிற்கும் போது, மொபைல் போன் பார்ப்பதைத் தவிர்த்து, கால்களை முன்பக்கமாக 20 வினாடிகள் நீட்டலாம்.

வயிறை உள்பக்கமாக இழுப்பது, கைகளை மேல் நோக்கி துாக்குவது, நீட்டுவது என்று சில வினாடிகள் செய்தால், முதுகு தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.

அலுவலகத்தில் இருக்கும் போது, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது, முன்பக்கமாக 20 வினாடிகள் கால்களை நீட்டலாம். இதை, ஐந்து தடவை செய்யலாம்.

காலையில் எழுந்ததும் தரையில் போர்வையை விரித்து படுத்து, கால்களை மேல் நோக்கி துாக்க வேண்டும். இதே நிலையில் 20 வினாடிகள் இருக்கலாம். இது போல ஐந்து முறை செய்யலாம்.