கத்தரிக்காயும் அலர்ஜியும்!
கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, ஆகியன நிறைந்துள்ளன. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் இப்படி பல சத்துகளை அடக்கியுள்ளன.
பல நன்மைகள் நிறைந்த கத்திரிக்காய் சிலருக்கு சாப்பிட்டதும் அரிப்பை ஏற்படுத்தும். மேலும், சிலருக்கு கத்திரிக்காய் சாப்பிட்டால் தோலில் படை உருவாகும்.
கத்திரிக்காயில் உள்ள புரொட்டின் தான் அதை உண்பவர்களுக்கு அலர்ஜியை உண்டாக்குகிறது. கத்திரிக்காயில் அதிகப்படியான சோலனைன் மற்றும் ஹிஸ்டமின் இருக்கிறது.
இவை ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்ப்பாட்டிற்கு இடையூறு தரும். அதனாலேயே சிலருக்கு அதை உண்டவுடன், வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல், ஏன் காய்ச்சல் கூட உண்டாகும்.
அது மட்டுமல்ல அவை நம் உடலில் இருந்து நீக்க, நம் உடல் எதிர்த்துப் போராடும் போது அலர்ஜி வரும். இதனால்தான் சரும அலர்ஜி, அரிப்பு, தடிப்பு என ஏற்படுகின்றன.
இது போன்ற அலர்ஜிகள் இருந்தால் கத்திரிக்காய் சாப்பிடக் கூடாது. அதிக அளவில் உண்ணும் போது கத்திரிக்காயால் அதிக அளவில் அலர்ஜி ஏற்படும். அவற்றை நிறுத்தியவுடன் அலர்ஜி குறைய துவங்கும்.
கத்தரிக்காய் மட்டும் அல்ல சிலருக்கு பால், தயிர், முட்டை, வேர்க்கடலை, இறைச்சி, கடல் மீன்கள், இறால், நண்டு, கருவாடு, உருளைக்கிழங்கு என பல உணவுகள் அலர்ஜி ஏற்படுத்தும்.
இப்படி உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. அலர்ஜி இருப்பவர்கள் தவிர அத்தனை பேரும் கத்திரிக்காயை உணவில் பயன்படுத்தலாம்.