கண்கள் வறட்சியாகுதா? இதோ சில டிப்ஸ்!!

பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்புரை, கிளக்கோமாவால் பார்வை குறைபாடு ஏற்படலாம். இதில் கண்கள் வறட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் ஏ, டி குறைபாடு உலர் கண் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஆளி விதை, மத்தி மீன் வகைகள் எடுத்துக் கொள்ளலாம்.

போதுமான அளவு தண்ணீர் அருந்துவது கண்கள் வறட்சியை தடுக்கும்.

அடிக்கடி கண்களை சிமிட்டினால் வறட்சியை தவிர்க்கலாம்.

அலைபேசி, தொலைகாட்சி, கணினி பயன்பாட்டை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.