உன் வீட்டு தோட்டத்தில்… பிளாக்பெர்ரி வளர்க்கலாமே!!

பிளாக் பெர்ரி பழத்தில், குறைந்த கலோரிக்கள் இருப்பதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பழமாக உள்ளது.

மேலும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்துதல், நினைவாற்றல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நன்மைகள் கொண்டுள்ளன.

பல நன்மைகள் நிறைந்த பிளாக் பெர்ரியை உங்கள் வீட்டில் தோட்டத்திலும் வளர்க்கலாம். இது தொட்டிகளில் வளர்க்க ஏற்றது.

இது, படரும் தன்மை உடைய செடி. மலை மண், சவுடு மண், செம்மண் உள்ளிட்ட பல்வேறு மண்ணின் சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரும்.

குறிப்பாக மலை சார்ந்த செம்மண்ணுக்கு நன்றாக வளரும். பெர்ரி வகையை சார்ந்த பழங்கள் இயற்கைக்கு ஏற்ற மாதிரி வளரும் தன்மை கொண்டது.

இந்த செடிகளை அவ்வப்போது கத்தரித்து விடும்போது அதிக அளவில் பழங்களை தரும்.