மாடித்தோட்டத்திலும் விளையும் ரெட் சீத்தாப்பழம்

ரெட் சீத்தாப்பழத்தை, நம்மூர் செம்மண்ணில் எளிதாக சாகுபடி செய்யலாம்.

இது, மூன்று ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.

இந்த ரெட் சீத்தாப்பழ மரங்களை நடும்போது, தண்ணீர் தேங்காத மேட்டுப்பகுதிகளில் நட வேண்டும்.

அப்போது தான் செடிகளின் சேதத்தை தவிர்க்க முடியும். மரமும், செங்குத்தாக வளரும்.

குறிப்பாக, களர் உவர் மண் நிலத்தில், பழவகை மரங்களை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

இந்த ரெட் சீதா பழத்தின் தோல் மட்டும் சிவப்பாக இருக்கும். உள்ளே இருக்கும் சதை பற்றில், அனைத்துவித சத்துக்கள் நிறைந்திருப்பதால், மக்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்க தயங்குவதில்லை.

மேலும், மாடித் தோட்டத்திலும், ரெட் சீத்தாப் பழ மரத்தை சாகுபடி செய்யலாம். அதற்கேற்ப மரக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.