மது குடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?
மது பழக்கத்திலிருந்து மீள நினைப்பவர்கள் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி 66 நாட்கள் சரியாக செயல்பட வேண்டும் என்ற மனநிலைக்கு வரவேண்டும்.
அதில் முதல் 22 நாட்கள் மதுவை பற்றி நினைக்காமல் தங்கள் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அது மிகவும் கடினமான மனநிலையை ஏற்படுத்தும்.
2வது 22 நாட்கள் கடைபிடிக்கும் பழக்கத்தை விரும்ப நேரிடும். கடைசி 22 நாட்கள் முன்னதாக நாம் கடை பிடித்த நல்ல பழக்கங்கள் அப்படியே நம் வாழ்வில் தொடரும்.
இந்த நாட்களை கடை பிடிப்பவர்கள் ஒவ்வொரு நாளும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ள வேண்டும். அது உற்சாகத்தை ஏற்படுத்தும்.
மது பழக்கத்தில் இருப்பவர்கள் தங்கள் கவனத்தை விளையாட்டில் திருப்பி பொழுது போக்கிற்காக புத்தகம் எழுதுவது, படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாலும் அதிலிருந்து வெளிவரலாம்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அனைத்துக்கும் நம்முடைய மனம் தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.