இன்று உலக சைவ உணவாளர்கள் தினம்!

உலக சைவ தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது .

இத்தினம் 1978ல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

சைவ வாழ்க்கை முறையின் நெறிமுறை , சுற்றுச்சூழல் , சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நன்மைகள் பற்றிய முக்கியதுவத்தை எடுத்துரைக்கிறது.

மேலும் சைவ உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

சைவ உணவை உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்த அபாயத்தை குறைக்க முடியும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது உடலின் வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் ஆழமான மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது.

தாவர உணவுகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், எளிதில் ஜீரணிக்கக்கூடிய வடிவத்தில், ஒரு நபருக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சைவ உணவில் உள்ளன.