பழங்களை அப்படியே சாப்பிடலாமே!

ஆங்காங்கே பழக்கடைகளில் குளிரூட்டப்பட்ட பாத்திரங்களில், வாழைப்பழத்தில் தயாரான 'புரூட் மிக்சர்' எனப்படும் பழ ரசக் கலவை விற்பனையாகிறது.

இதில், சிறிதளவு அன்னாசி, திராட்சை, ஆப்பிள், வெள்ளை சர்க்கரையுடன் சுவையூட்டிகள், ரசாயனங்கள், செயற்கை நிறமிகள் என்று சேர்க்கப்படுவதால், செரிமானப் பிரச்னை வரக்கூடும்.

ஒவ்வொரு பழத்திலும் இயற்கையிலேயே இனிப்புத் தன்மையுடன், புளிப்பு, துவர்ப்பு என்று வெவ்வேறு சுவைகள் உள்ளன.

மேலும், பழங்களில் தாதுக்கள், விட்டமின்கள் என்று சத்துக்களும் மாறுபட்டு உள்ளன.

இதில் சர்க்கரையை கலப்பதால், பழத்தின் இயல்புத் தன்மை மாறிவிடும். இது, ஆரோக்கியமானது இல்லை.

பழங்களின் முழு சத்துக்களும், அவற்றில் உள்ள நார்ச்சத்தும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால், நன்றாக கழுவி, சுத்தம் செய்தபின் அப்படியே சாப்பிட வேண்டும்.