இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் இருந்தால் பேட்டி லிவர் அதிகரிக்குமா?
கணையத்தில் ஆல்பா, பீட்டா, டெல்டா செல்கள் உள்ளன. ஆல்பா செல்கள் குளுக்ககான் ஹார்மோனையும், பீட்டா செல்கள் இன்சுலினையும் உற்பத்தி செய்கின்றன.
இன்சுலின் இருந்தால் மட்டுமே ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.
நாம் சாப்பிடும் உணவு குளுக்கோசாக மாறி, தசைகள், உறுப்புகளுக்கு செல்லும் போது, தசைகளில் உள்ள குளுக்கோஸ் ரிசெப்டார்கள், அதை வாங்கி பயன்படுத்துவதற்கு இன்சுலின் உதவி செய்யும்.
பொதுவாக கல்லீரலில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே கொழுப்பு இருக்கும். அந்த அளவைத் தாண்டும் போது, 'பேட்டி லிவர்' உருவாகி விடும்.
'இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' எனப்படும் இன்சுலின் செயல்பாடு முழுமையாக இல்லாமல் போனால், தசைகளுக்கு சக்தி கிடைக்காமல், கொழுப்பாகவே சேமிக்கப்படும்.
இதை தவிர்க்க அதிக கலோரி, சர்க்கரை அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்வியல் முறை மாற்றங்கள் மிகவும் அவசியம்.