மூட்டு தேய்மானம் எதனால் வருகிறது?

முழங்கால் மூட்டுகளில், 'மெனிஸ்கஸ்' என்ற ஜவ்வு உள்ளது. இது மூட்டுகள் தேயாமல் காப்பாற்றும் ஜவ்வு.

வயதான காலத்தில் இந்த ஜவ்வு கிழிவதற்கும், விலகி போவதற்கும், மூட்டுகள் ஒன்றின் மேல் ஒன்று உராய்ந்து வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜவ்வில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்தாலே வலி சரியாகி விடும்.

முழங்கால் மூட்டு முழுதுமாக தேய்ந்து, ஊசி, மருந்து என்று எதனாலும் குணப்படுத்த முடியாது என்ற நிலையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்.

அதற்கு முன்பாக, 'ஆர்தோஸ்கோபி' முறையின் தனி பிரிவான ஜாயின்ட் பிரிசர்வேசன் முறையில் 'கீ ஹோல்' எனப்படும் நுண்துளை வாயிலாக கேமராவை செலுத்தி, என்ன பிரச்னை என்று பார்க்க வேண்டும்.

ஜவ்வு சிதைந்து, கிழிந்து இருந்தால், இதை சரிசெய்யும் போது வலி சரியாகும்.

பொதுவாக மெனிஸ்கஸ் வேர் பகுதியில் கிழிந்து விலகி இருக்கும். இதை பழைய நிலையில் வைத்தால் வலி குறைந்து இயல்பாக செயல்பட முடியும்.