ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு இதோ சில டிப்ஸ்கள்...!

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள், அன்றாட செயல்பாடுகளை சரிவர மேற்கொள்ளும் போது, உங்களின் வாழ்க்கை முறை உங்களை அறியாமலேயே ஆரோக்கியப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானது தினமும் போதியளவு தண்ணீர் குடிப்பது ஆகும். இது உடலின் ஆற்றலை பராமரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும் உதவுகிறது.

ஒருசில உணவுகள் மனதுக்கும் பயன் தரக்கூடும். அதில், ஒமேகா-3 என்ற ஆரோக்கியமான கொழுப்புகள் மனச்சோர்வை குறைப்பதால், மீன்கள், ஆளிவிதை, சியா விதைகள், அக்ரூட் பருப்புகளை சேர்க்கலாம்.

உடற்பயிற்சி மனநிலையை மேம்படுவதுடன், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். எனவே, யோகா, ஜிம்முக்கு செல்லுவது, குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதை உற்சாகமுடன் செய்யலாம்.

வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே சமையல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஆரோக்கியம் மேம்படுகிறது; உடல்நலப்பிரச்னைகளுக்கு வாய்ப்பு குறைவதுடன், வீண் செலவுகளும் தவிர்க்கப்படுகிறது.

புத்தகங்களை படித்தல், தியானம், தோட்டங்களில் செடிகளை பராமரித்தல், செல்லப்பிராணிகளுடன் விளையாடுதல் போன்றவை மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு தினமும் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. சரிவிகித உணவுடன் முறையான தூக்கமும் சேர்ந்தால் உடலும், மனமும் புத்துணர்ச்சி அடையும்.