உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் எது?
தினமும் காலை எழுந்தவுடன் அல்லது மாலை நேரம் 4 மணி முதல் 6 மணிக்கு வரை உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரமாகும். சுமார் 30 நமிடம் முதல் செய்யலாம்.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன் அல்லது திட உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து, உடற்பயிற்சி செய்வது நல்லது.
சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அது செரிமானத்தை பாதிக்கும்.
அந்தந்த வயதிற்கு ஏற்ற, பொதுவான சில உடற்பயிற்சிகளை அனைவரும் செய்யலாம்.
ஆனாலும் வயது, உடல் எடை, தேவைகளுக்கு ஏற்ப, பயிற்சிகளை செய்தால் கூடுதல் பலனை தரும்.
நடைப்பயிற்சி என்றால் பொதுவான உடல் ஆரோக்கியத்திற்கு வாரத்தில், ஐந்து - ஆறு நாட்கள் தினமும், 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடக்க வேண்டியது அவசியம்.
நடக்கும்போது கைகளை நன்றாக வீசி நடப்பது தோள், கைகள், ரிலாக்சாக உதவும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.