அதிக உடல் எடை கொண்டவர்கள் இதை முயற்சிக்கலாம்!

ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட காரணங்களால் உடை எடை கூடியவர்களுக்கு எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதானதல்ல.

பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்தின் பின், அதுவும் குழந்தை பேறுக்கு பின், உடல் அமைப்பு மாறிவிடுகிறது

தன்னம்பிக்கை என்ற ஒன்று இருக்கும்பட்சத்தில் தோற்றம் என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இடுப்பை ஒட்டிப் போடப்படும் ஆடைகளால் தொப்பை எளிதில் வெளிப்படும். அதனால் வெளியே செல்லும் போது அனார்கலி வகை ஆடைகளை தேர்வு செய்யலாம்.

அனார்கலியை போல், ஸ்டிரெயிட் டைப் குர்தாக்களும் தொப்பையை மறைக்கும்.

ஸ்பான்டெக்ஸ் பொருளால் உருவாக்கப்பட்ட பாடி ஷேப்பர்ஸ் ஆடைகளை விழாக்கள், பார்ட்டிகளுக்கு பயன்படுத்தலாம். உடலை சிக்கென்ற தோற்றத்துடன் வெளிக்காட்ட உதவும்.

ப்ரில்ஸ் உடைகள் உடலை மெலிவாக காட்ட சரியானதாக இருக்கும்.

நீளமான கவுன்களும் உடலை ஸ்லிம்மாக காட்டும். மேலும் சற்று லூசாக இருக்கும் கவுன்களை அணியலாம்.

கருப்பு நிறத்தில் ஆடை அணிவதால் உடல் மெலிந்திருப்பது போன்று காட்சிப்படுத்தும்.