இந்த குளிர்காலத்தில் இந்தியாவில் ரசிக்க வேண்டிய அழகிய ரயில் பயணங்கள் சில !
கல்கா - சிம்லா... இமயமலை மலைகள் வழியே அழகிய பள்ளத்தாக்குகள், பனிமூட்டமான புல்வெளிகள், 103 சுரங்கங்கள் என மூச்சடைக்க வைக்கும் இந்த கல்கா - சிம்லா பாரம்பரிய பொம்மை ரயில் பயணம்.
டார்ஜீலிங் - ஹிமாலயன் ரயில்வே... இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்படும் இந்த ரயில், கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீ., உயரத்தில் கம்பீரமாக பயணிக்கிறது.
நீலகிரி மலை ரயில்... 1908ம் ஆண்டு முதல் இன்றும் இது மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு நீராவி என்ஜினில் இயங்குகிறது. அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள் என இயற்கையை ரசிக்கலாம்.
காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே.... மூடுபனி நிறைந்த இமயமலை வழியாகச் செல்லும் இந்த ரயில் பயணத்தில் பனி படர்ந்த சிகரங்களை சுவாரஸ்யமாக ரசிக்கலாம்.
ஜம்மு-உதம்பூர்... 20 சுரங்கங்கள், 158 பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன. ஷிவாலிக் மலைத்தொடர்களைச் சுற்றியுள்ள ஆறுகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் அழகிய காட்சிகளில் மெய்சிலிர்க்கலாம்.
ஹூப்ளியில் இருந்து மட்கானுக்கு பயணிக்கும் போது, பிரம்மாண்டமான துத்சாகர் நீர்வீழ்ச்சியின் வழியே கொட்டும் தண்ணீரின் அழகை ரசிப்பது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாகும்.
மாதேரன் - நேரல்... குறுகிய இந்த பொம்மை ரயில் பயணத்தில், கரடுமுரடான நிலப்பரப்புகளின் வழியாக செல்வது வெகுவாக ஈர்க்கும்.