உடலைத் தேற்றக்கூடிய தேற்றான் கொட்டை பயன்கள் அறிவோமா!!

தேற்றான் மரத்தில் இருந்து கிடைப்பது தான் தேற்றான் கொட்டை. இக்கொட்டை, உடலைத் தேற்றக்கூடிய தன்மை உடையதால் இந்த பெயர் கொண்டுள்ளது.

குடிநீரை எடுத்துச் செல்வதற்கான வசதிகள் பழங்காலத்தில், கடல் பயணம் செய்வோர், தேற்றாங்கொட்டையால் கடல் நீரை சுத்திகரித்து, அதில் உள்ள உப்புத்தன்மையை போக்கி, பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

தேற்றாங்கொட்டை தண்ணீரை மட்டுமல்ல, உடலில் உள்ள ரத்தத்தையும் சுத்திகரிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.

சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய கோளாறுகளை குணப்படுத்தும். அடிக்கடி சிறுநீர் கழித்தலை கட்டுப்படுத்தும்.

இதை கொண்டு புத்துணர்ச்சி பானம் தயார் செய்யலாம். காபி வாசனை போன்று இருக்கும்.

லேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும்.