வில்லியம் ஷேக்ஸ்பியரின் வியக்க வைக்கும் வரிகள்!!

நமக்கு நாமே உண்மையாக இருந்தால், யாரிடமும் பொய்யாக இருக்க முடியாது.

அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

எதுவுமே செய்யாமல் எதுவும் கிடைப்பதில்லை.

புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள்.

பேசிய சொற்களை திரும்பப்பெற முடியாது, எனவே நீங்கள் பேசுவதற்கு முன் இரண்டு முறை சிந்தியுங்கள்.

பொற்காலம் என்பது நமக்கு முன்னால் இருக்கிறது, நமக்குப் பின்னால் இல்லை.

அறியாமை என்பது கடவுளின் சாபம், அறிவு என்பது நாம் சொர்க்கத்திற்குப் பறப்பதற்கான சிறகு.