இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்!

உலகில் மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் வன்முறைக்கு ஆளாகிறார். பத்தில் ஒரு பெண் போலீஸ் உதவியை நாடுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதி வழங்க இத்தினம் வலியுறுத்துகிறது.

பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க ஐ.நா., சார்பில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

டொமினிகன் குடியரசு நாட்டின் அதிகாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த மூன்று பெண் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்ட நாள் நவம்பர் 25.

அந்த மூன்று பெண் செயற்பாட்டாளர்களை நினைவுகூரும் வகையில், வருடம் தோறும் இத்தினம் சர்வதேச தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க ஒன்றுபடுங்கள் என்பது இந்தாண்டு மையக்கருத்து.

பெண்களுக்கு எதிரான வன்முறை நிகழ்ந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டிய எண் 181 ஆகும்.