அடிக்கடி உணவில் பனீர் சேர்த்துக் கொள்வதால்...?
பாலிலிருந்து தயாரிக்கப்படும் பனீர், சுவைமிகுந்த உணவு மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. அன்றாட உணவில் பனீரை சேர்த்துக் கொள்ளும்போது, அதிகமான நன்மைகள் கிடைக்கும்.
பனீர் என்றாலே, கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும். ஆனால், இவற்றைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
100 கிராம் பனீரில், 265 கலோரிகள், 20.8 கிராம் கொழுப்பு, 1.2 கிராம் கார்போஹைட்ரேட், 18.3 கிராம் புரதம் மற்றும் 208 மி.கி., கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதில் நிறைந்துள்ள, செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள், மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த, பொட்டாசியம் உதவுகிறது. செலினியம், கருவுறாமை மற்றும் சரும பிரச்னைகளை சரி செய்கிறது.
இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால், பற்கள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்கவும், தசை அழற்சியை சரி செய்யவும், பனீர் உகந்தது.
பனீர் சாப்பிடும்போது, உடனடி ஆற்றலை பெற முடியும். உடல் மெட்டாபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது.
இதில், ஒமேகா - 3 மற்றும் 6, கொழுப்பு அமிலங்கள் உள்ளன. கர்ப்பிணிகள் மற்றும் மூட்டுவலியால் பாதிக்கப்படுபவோர், பனீரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதிலுள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை குறைத்து, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை போக்குகிறது.
உடலிலுள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.