மழைக்காலத்தில் மிரட்டும் கொசுக்களை விரட்ட டிப்ஸ்.. டிப்ஸ்...

மழைக்காலத்தில் கொசு இல்லாத வீட்டைப் பெறுவது ஒரு கனவு போன்றது. இரவு வந்தாலேயே நம்மில் பலர், கொசுவை விரட்ட கொசுவர்த்தி சுருள்கள், ஸ்ப்ரே, திரவங்களை தேட துவங்கிவிடுவோம்.

ஆனால் இவற்றில் பெரும்பாலானவை ரசாயனங்கள் நிறைந்துள்ளன. சுவாசிப்பதில் சிரமத்தை உருவாக்குவது உட்பட கண் எரிச்சல் போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

வீட்டிற்குள் இருக்கும் கொசுக்களை அகற்றுவதற்கான வழிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சூரியன் மறையும் போது, கதவு ஜன்னல்களை மூடுங்கள். கதவு, ஜன்னலை மூட விரும்பாதவர்கள், கண்டிப்பாக கதவு, ஜன்னல்களுக்கு கொசு வலைகளை இணைத்துவிடுங்கள்.

ஏசியில் வெளிவரும் நீர் அல்லது தோட்டத்தில் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடும். அதனால் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும்.

சாமந்தி, துளசி, லெமன்கிராஸ், சிட்ரோனெல்லா, புதினா போன்ற சில வகை செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை ஈசியாக விரட்டலாம்.

கொசுவை விரட்ட கிராம்புகளுடன் எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். கிராம்பு மற்றும் சிட்ரஸ் வாசனை கொசுக்களை வெளியேற்ற உதவும்.

சில பூண்டு பற்களை நசுக்கி அதை தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். அந்த நீரை வடிக்கட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, வீட்டை சுற்றி தெளிக்கவும். கொசுவை எளிதாக விரட்டும்.