வெற்றி என்னும் இலக்கை அடைய இதோ 8 டிரிக்ஸ்
தெளிவான இலக்குகளை அமைத்தல்... தொடர்ந்து ஊக்கப்படுத்தவும், ஒழுக்கமாக இருக்கவும் உதவக்கூடிய ஒரு காரணத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்கு தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும்.
தினசரி வழக்கத்தை பின்பற்றுதல்... தினசரி வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவது உங்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.
முன்னேற்றத்தை கொண்டாடுதல்... எந்த ஒரு வேலையை செய்து முடித்தாலும் சரி அதை கொண்டாட மறவாதீர்கள். அப்போது உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும்.
ஒழுங்கமைப்பை பின்பற்றுதல்... பணியிடத்தில் எல்லா விஷயங்களிலும் ஒழுங்கமைப்பு மற்றும் சுத்தத்தை பின்பற்றுங்கள்.
நேர மேலாண்மை... உங்களின் வேலைகளை டெட்லைன்களுக்கு முன்னமே முடிப்பது மற்றும் விஷயங்கள் கைமீறி போவதை தவிர்ப்பதற்கு நேர மேலாண்மை உதவும்; வேலைப்பளுவை தவிர்க்கலாம்.
சுய கட்டுப்பாட்டை வளர்த்தல்... கடுமையாக உழைப்பது முக்கியம்தான் என்றாலும் கூட அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதும் அவசியம்.
நேர்மறையான எண்ணம்... எப்போதும் நேர்மறையான யோசனைகள் ஊக்கத்தையும், இலக்குகளை நோக்கி வேலை செய்வதற்கான ஒரு உந்துதலையும் அளிக்கும்.
முன்னேற்றத்தை கண்காணித்தல்... உங்களின் தினசரி வளர்ச்சி மற்றும் செய்த பணி குறித்து அவ்வப்போது ஆய்வு செய்யதால் தேவையான மாற்றங்களை புகுத்தி எளிதாக இலக்கை எட்டலாம்.