இந்துப்பை தினமும் உணவில் சமைக்க பயன்படுத்தலாமா?

பிங்க் சால்ட், இந்துப்பு என அழைக்கப்படும் ஹிமாலயன் ராக் சால்ட்டில் பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளன.

உயரமான மலைப்பகுதிகளில் மண்ணில் அயோடின் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால் இந்துப்பில் அயோடின் சத்து பெரியளவில் இல்லை.

அயோடின் நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய சத்தாகும். தினசரி 150 மைக்ரோ கிராம் அளவு அயோடின் கட்டாயமாக தேவைப்படுகிறது.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களுக்கு இன்னும் அதிகளவில் தேவைப்படுகிறது.

எனவே, தினமும் சமைப்பதற்கு சாதாரண அயோடின் உப்பை பயன்படுத்த வேண்டும்.

இந்துப்பை எலுமிச்சைச் சாறு அல்லது நெல்லிச் சாறு போன்றவற்றில் கலந்து தினமும் ஒரு முறை பருகி வரலாம்.

அயோடின் கலந்த உப்புக்கு பதிலாக முற்றிலுமாக அயோடின் இல்லாத கல் உப்பையோ அல்லது இந்துப்பையோ பயன்படுத்துவது ஆரோக்கியத்துக்கு உகந்தது அல்ல என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.