பப்பாளி விதையின் எண்ணற்ற நன்மைகள் !
பப்பாளி பழத்தைப் போலவே பப்பாளியின் விதையிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இதில் பாலிபீனால், பிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடன்டுகள் போன்ற மைக்ரோ நியூட்ரியன்ஸ் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பப்பாளி விதைப் பொடியை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது ஒரு டீஸ்பூன் பப்பாளி விதைகளை அப்படியே மென்று சாப்பிடலாம்.
கொழுப்பைக் குறைக்கும்... பப்பாளி விதையிலுள்ள அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்றுவதால் உடல் எடை குறையும்.
மாதவிடாயை சீராக்கும்... பப்பாளி விதைகளிலுள்ள 'கரோட்டின்', ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்குவதால், மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கக்கூடும்.
சரும பராமரிப்பு... இதன் சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயது முதிர்ச்சியால் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும்.
பொடுகைப் போக்கும்... உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவி குளித்து வர, கூந்தல் அடர்த்தியாக வளரும்; பொடுகை தவிர்க்கலாம்.
நோய்த் தொற்றைத் தடுக்கும்... பப்பாளி விதையிலுள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள், ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.