குளிர்காலத்தில் சருமத்துக்கு பளபளப்பை தரும் ஜூஸ்கள் சில !

பீட்ரூட் மற்றும் ஆப்பிள் ஜூஸ்... இவற்றிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பப்பாளி மற்றும் அன்னாசி ஜூஸ்... இந்த வெப்பமண்டல பழங்களிலுள்ள பப்பெய்ன் நொதிகள், வைட்டமின் சி போன்றவை இறந்த செல்களை நீக்கி, சருமத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்... ஆரோக்கியமான சருமத்துக்கு தேவையான பீட்டா கரோட்டின் கேரட்டில் நிறைந்துள்ளது. அதேபோல், ஆரஞ்சுகளில் உள்ள வைட்டமின் சி சருமத்துக்கு பளபளப்பை தருகிறது.

மாதுளை ஜூஸ்... இதிலுள்ள அந்தோசயினின்கள், பாலிபினால் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்துக்கு புத்துணர்ச்சியளித்து இளமை தோற்றத்தை தக்க வைக்கிறது.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை ஜூஸ்... வெள்ளரியிலுள்ள நீர்ச்சத்து சருமம் வறட்சியடையாமல் தவிர்க்கிறது. எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி கரும்புள்ளிகளைப் நீக்கி, முகப்பொலிவு பெற உதவும்.

கற்றாழை மற்றும் புதினா ஜூஸ்... குளிர்காலத்தில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது கற்றாழை; புதினா சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவுவதால் சருமத்துக்கு பளபளப்பு கிடைக்கும்.