வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொள்வது எப்படி ?

ஆழ்ந்த சுவாசப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்... ஒரிரு முறை ஆழமாக மூச்சை இழுத்து வெளிவிடும்போது, உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். தசைகள் தளர்வாகி இதயத்துடிப்பின் வேகம் குறையும்.

உடற்பயிற்சி செய்யுங்கள்... தளர்வாக நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சி செய்தால், மன அழுத்தம் குறைந்து, உடலில் எண்டோர்பின் வெளியாகும். இது மனநிலையை மேம்படுத்தும்.

டைரி எழுதுங்கள்... உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகளை டைரியில் எழுதுவது, நிதானத்தையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த உதவும். அப்போது எண்ணங்களில் தெளிவு உண்டாகி, வீண் பதற்றம் குறையும்.

இயற்கையுடன் இணைந்திருங்கள்... வீடு அல்லது அலுவலகம் அருகிலுள்ள பூங்கா, நீர்நிலைகளில் சிறிது நேரம் செலவிடும்போது, மன அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.

அமைதியாக உள்வாங்குங்கள்... சரி, தவறு என தீர்மானிக்காமல், தற்போதைய சூழலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இது மன அழுத்தம், பதற்றத்தை குறைப்பதோடு, சுய விழிப்புணர்வை அதிகரிக்கும்.

இசையை ரசியுங்கள்... வரிகள் எதுவும் இல்லாத, மெல்லிய இசையை குறைந்த ஒலியளவில் கேளுங்கள். ரத்த அழுத்தம், இதய துடிப்பு வேகத்தை குறைத்து தளர்வாக உணரலாம்.

நண்பர்களிடம் பேசுங்கள்... உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர் அல்லது மனநல ஆலோசகரிடம் பேசும்போது, புதிய கோணத்தை பார்க்கலாம்.