குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?

குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்காக ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது, இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

இதய நோய் பாதிப்பு இருந்தால், இந்த கூடுதல் அழுத்தம், மாரடைப்புக்கு வழிவகுக்கும். வழக்கத்தை விட அதிகமான வேலைப்பளு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் இதய பாதிப்பை அதிகரிக்கும்.

உடலின் வெப்பநிலை குறையும் போது, பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். மேலும் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, ரத்த உறைவும் ஏற்படும். இவை இரண்டும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால், இந்த ரத்த உறைவு, இதயத்திற்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கிறது, இதன் காரணமாகவும் மாரடைப்பு ஏற்படுகிறது.

கதகதப்பான ஆடைகளை அணிவது, வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருப்பதுமிகவும் அவசியம்.

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை இந்த நேரத்தில அதிகம் சாப்பிட வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நடைபயிற்சி, யோகா செய்யலாம். அதீத உடல் செயல்பாடு, இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதா ல் 'வார்ம் -அப்' செய்வது அவசியம்.

ரத்த அழுத்தம், கொழுப்பு இவற்றை கட்டுக்குள் வைப்பதோடு, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.