இடுப்பு எலும்பு வலியால் அவதியா... டிப்ஸ் டிப்ஸ்...

தற்போது சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இடுப்பு எலும்பு தேய்வால் பாதிக்கப்படுகின்றனர்.

முன்பு போல் உடலுக்கு நாம் வேலை கொடுப்பதில்லை. அலுவலக வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்கின்றனர். இளம் வயதினர் விளையாட்டு, உடற்பயிற்சி செய்வதில்லை.

40 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைபாட்டால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படுவதால் முதுகு தண்டு வடம் தேய்வு ஏற்படுகிறது.

இதன் காரணமாக இடுப்பு எலும்பில் வலி ஏற்படுகிறது. இதனை எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறிந்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்து குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்வதற்கு தினமும் சிறு தானிய உணவுகளை ஒரு வேளை உட்கொள்ளலாம். புரத சத்துள்ள உணவுகளை அதிகம் எடுக்கவும்.

தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தண்டுவடத்தை பலப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

பிசியோதெரபி சிகிச்சை பெற வேண்டும். இடுப்பில் பெல்ட் அணிந்து கொள்ளலாம்.