சிறுநீரில் ரத்தக்கசிவு எதனால் ஏற்படுகிறது? டிப்ஸ் டிப்ஸ்!!
சிறுநீரகம், சிறுநீரகப் பை, சிறுநீரக குழாயில் புண், கல், அல்லது கட்டி இருந்தால் இதன் மூலம் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பது மூலம், உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரகத்தில் தேங்கி கற்களாக உருவாகிறது.
தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தொற்று மூலமும் புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இது போல சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் தொற்று ஏற்படுவதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ரத்த கசிவால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதனை நீர்க்கடுப்பு, சூட்டு கடுப்பு என மெத்தனமாக இருக்க கூடாது.
உடலில் கழிவுகள் தேங்காத வகையில் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இளநீர், அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, நார்ச்சத்து நிறைந்த பழங்கள், நீர்சத்து நிறைந்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, நுங்கு, பாதாம், காரட் சாப்பிடலாம்.
அதிக உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். கால்சியம், ஆன்டாசிட் மருந்துகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.