முதுமையை எளிமையாக்க சில டிப்ஸ்...
வயது அதிகரிக்கும் போது, நீண்ட நாள் நோய்கள் உருவாகி, உடல்நலம் குறைந்து போக வாய்ப்புண்டு. அவர்களின் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாகி, நோய்கள் தாக்கும் ஆபத்து உள்ளது.
பிறரை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இதைக்கருத்தில் கொண்டு, முதியவர்கள் பொதுவான உடல் நலத்துடன் உள்ளோமா என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.
சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். மருத்துவர் வேண்டாம் என அறிவுறுத்திய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
கண் பார்வை குறைபாடுகள், காதுகேளாமை இருந்தால், அதற்கான உபகரணங்களை எவ்வித தயக்கமும் இன்றி, பயன்படுத்த வேண்டும்.
நடப்பதில் தள்ளாட்டம் இருந்தால், 'வாக்கர்' பயன்படுத்த வேண்டும். தவறி விழுந்தால் எலும்பு முறிவு ஏற்படும். படுத்த படுக்கையாக மீதமுள்ள நாட்களை கழிக்க நேரிடும்.
இரவு நேரத்தில், இயற்கை உபாதை கழிப்பதற்கு வீட்டிலோ, அல்லது பஸ்ஸிலோ செல்லும் போது, வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
அடிமைப்படுத்தக்கூடிய மது, சிகரெட் போன்ற பழக்க, வழக்கங்களை தவிர்ப்பது நல்லது.
நோய் இருந்தால், அதற்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை, உடல்நல பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.