மனதை அமைதிப்படுத்த உதவும் 10 வழிகள்..!

நடைபயிற்சி... இது மனதை தெளிவுபடுத்த உதவுகிறது. நமக்கு ஒரு வித்தியாசமான பார்வையை வழங்குகிறது.

ஈடுபாடு... ஒரு நாள் முழுவதும் நீங்கள் விரும்புவதை செய்ய, விடுமுறை எடுத்துக் கொண்டு ஈடுபாடுடன் செய்யுங்கள்.

தாராளமாக இருங்கள்... முன்பின் தெரியாத நபருக்கு ஏதாவது கொடுத்து உதவுங்கள். அப்போது, மனதிற்குள் இதமாகவும், சிறப்பாகவும் உணர வைக்கும்.

கற்றுகொள்ளுங்கள்... நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள். பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்கொண்டு சமாளிக்க அறிவுப்பூர்வமாக உங்களை தயார்படுத்துங்கள்.

நாளைக்காக இன்றே தயாராகுங்கள்... அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை முந்தைய நாள் மாலை எழுதி வைத்து கொள்ளுங்கள்.

தொடர்ந்து முன்னோக்கிச் செல்லுங்கள்... எதுவாக இருந்தாலும் சிறிய அடிகளை எடுத்து வையுங்கள். நதி போல ஓடிகொண்டே இருங்கள். ஒரிடத்தில் தேங்குவது பயன் தராது.

முன்னுரிமை... எது முக்கியமானது என்பதை இப்போதே முடிவு செய்யுங்கள். கூடுதல் பொறுப்புகள் வேண்டாம் என சொல்லுங்கள்.

தூக்கம்... போதுமான ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இரவும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குங்கள்.

அழுகை நல்லது... எல்லா உணர்ச்சிகளை அடக்கி வைக்கும் பழக்கத்தை விடுங்கள். மனம் விட்டு அழுதால், நன்றாக உணருவீர்கள்.